கோவை விமான நிலையம் பின்புறம் தேங்காய் வியாபாரியிடம் வழிப்பறி செய்த நபர் கைது

போலீசார் விசாரணையில், கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது சத்தியமங்கலம் புளியம்பட்டியை சேர்ந்த வீட்டு தரகர் ராஜ்குமார்(24) என்பது தெரியவந்தது. பின் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Coimbatore: கோவை பீளமேடு பாலாஜி நகரை சேர்ந்தவர் மாலைராஜ்(42). தேங்காய் வியாபாரி. இவர் நேற்று முன்தினம் இரவு விமான நிலையம் பின்புறம் பிருந்தாவன் ரோட்டில் நின்று செல்போனில் பேசி கொண்டிருந்தார். 

அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் மாலைராஜிடம் பணம் கேட்டார். அவர் கொடுக்க மறுத்ததால் அந்த வாலிபர் கத்தி முனையில் மாலை ராஜை மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1500 ஐ பறித்து தப்பி சென்றார். இது குறித்து மாலை ராஜ் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், கத்தி முனையில் மிரட்டி பணம் பறித்தது சத்தியமங்கலம் புளியம்பட்டியை சேர்ந்த வீட்டு தரகர் ராஜ்குமார்(24) என்பது தெரியவந்தது. பின் போலீசார் நேற்று ஜூன்.10 அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...