மத்திய அமைச்சரவை இலாகா அறிவிப்பு.. யார் யாருக்கு எந்த இலாகா?

மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


New Delhi: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இதில் அரசு பொறுப்பேற்ற முதல் 100 நாட்களில் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், நாடாளுமன்ற கூட்டத்தொடர், மக்கள் நலத்திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்களின் இலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.,

மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சராக 3வது முறையாக நிதின் கட்கரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சாலை போக்குவரத்துறை இணை அமைச்சர்களாக ஹர்ஷ் மல்ஹோத்ரா, அஜய் தம்தா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜெய்சங்கருக்கு மீண்டும் வெளியுறவுத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அஷ்வினி வைஷ்ணவ்விற்கு மிண்டும் ரயில்வே துறை, தகவல் தொழில்நுட்பம், மின்னனு மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ராஜ்நாத் சிங்கிற்கு மீண்டும் பாதுகாப்புத்துறையை பிரதமர் நரேந்தி மோடி ஒதுக்கியுள்ளார்.

நிர்மலா சீதாராமனுக்குமீண்டும் நிதித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பியூஷ் கோயலுக்கு வர்தகத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அன்ன பூர்ணா தேவிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக ஜெ.பி.நட்டா நியமிக்கப்பட்டுள்ளார்

பூபேந்திர யாதவ்விற்கு சுற்றுச்சூழல், வனம் மற்றும் பவருநிலைத் துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

எஃகு, கனரகத் தொழில்துறை அமைச்சராக குமாராசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.

தொழிலாளர் நலத்துறை அமைச்சராக மன்சுக் மாண்டவியா நியமிக்கப்பட்டுள்ளார்.

தொலை தொடர்புத்துறை, வடகிழக்கு மாநில வளர்ச்ச்சித் துறை அமைச்சராக ஜோதிராதித்ய சிந்தியா நியமிக்கப்பபட்டுள்ளார்.

சிறு, குறு, நடுத்தர தொழில்துறை அமைச்சராக ஷோபா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமித்ஷாவிற்கு உள்துறையும், கூட்டுறவுத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதானுக்கு மனிதவளத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சிவராஜ் சிங் சவுகானுக்கு வேளாண் துறை, ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சிறுபான்மையினர் வளர்ச்சித் துறை அமைச்சராக கிரன் ரிஜிஜு நியமிக்கப்பட்டுள்ளார்.

தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரத்துறை இணைஅமைச்சராக எல்.முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சிராக் பஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்

மனோகர் லால் கட்டாருக்கு மின் துறை மற்றும் வீட்டு வசதித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிஷண் ரெட்டிக்கு நிலக்கரி, சுரங்கத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சராக தர்மேந்திர பிரதான் நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறு,குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை அமைச்சராக ஜிதன் ராம் மஞ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

சிஆர் பாட்டீல் நீர்வளத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கஜேந்திர சிங் ஷெகாவத்திற்கு சுற்றுலாத்துறை, கலாச்சாரத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சுரேஷ் கோபி சுற்றுலா, பெட்ரோலியத்துறை இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ராஜீவ் ரஞ்சன் சிங் கால்நடைத்துறை, மீன்வளத்துறை, பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்பானந்தா சோனோவால் துறைமுகம், கப்பல் போக்குவரத்து, நீர் வழி போக்குரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வீரேந்திர குமாருக்கு சமூக நலத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிரகலாத் ஜோஷி உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜுவல் ஓரல் பழங்குடியின நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹர்தீப் சிங் புரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மன்சுக் மாண்டவியா இளைஞர் மற்றும் விளையாட்டு, தொழிலாளர் மற்றும் வேலைவாய்புத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...