தாயைப் பிரிந்த குட்டி யானை முதுமலை யானைகள் முகாமை சென்றடைந்தது

கோவை, மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த மூன்று மாதங்கள் வயதான குட்டி யானை, இறுதியாக முதுமலை யானைகள் முகாமைச் சென்றடைந்தது.


நீலகிரி: கோவை, மருதமலை வனப்பகுதியில் கடந்த 30 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை 3 மாதமான குட்டி யானையுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு வனத் துறையினர் 5 நாட்கள் சிகிச்சை அளித்தனர்.

இதனிடையே தாயுடன் இருந்த மூன்று மாத குட்டி யானையை வனத் துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை தாயை பிரிந்து சென்றது. குட்டி யானை அதன் கூட்டத்துடன் வனத்திற்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர். அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானையை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது. இதனைத்தொடர்ந்து அங்கு சென்ற வனத் துறையினர் தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு கொண்டு வந்தனர். குட்டி யானையை தாயுடன் சேர்க்க மேற்கொண்ட பல கட்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.

பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்களை வரவழைக்கப்பட்டனர். இருப்பினும் இறுதி வரை தாய் யானை குட்டியை தன்னுடன் சேர்த்துக் கொள்ளவில்லை. இதனால் குட்டி யானை மீண்டும் ஒன்று சேர்ப்பதற்கான முயற்சிகள் தோல்வி அடைந்ததை அடுத்து, இன்று ஜூன்.9 அதிகாலை யானைக் குட்டி சிகிச்சை மற்றும் பராமரிப்பிற்காக முதுமலை யானைகள் முகாமிற்கு கொண்டு சென்றனர்.



இந்த நிலையில் தற்போது தாயை பிரிந்த குட்டி யானை முதுமலை யானைகள் முகாமை சென்றடைந்தது. மேலும் அங்கு உற்சாகமாக குட்டி யானை நடந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...

கோவையில் உள்ள பல்வேறு அணைகளின் நீர்மட்டம் மற்றும் நீர் வெளியேற்ற விவரங்கள்

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்த...