வண்டிக்காரன்புதூரில் யானையிடம் பேசி அனுப்ப முயன்ற தோட்டப்பணியாளரின் வீடியோ வைரல்

தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் வீட்டின் கதவை உடைத்து காய்கறிகளை சாப்பிட்ட யானையிடம், வீட்டில் ஒன்னும் இல்ல அவ்வளவுதான். போ சாமி என யானையிடம் கூறி திருப்பி அனுப்ப முயன்ற தோட்டப்பணியாளரின் செல்போன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் மற்றும் மருதமலை வன கோட்டத்துக்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் சுமார் 20க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் வலம் வரும் காட்டு யானைகள் வேளாண் தோட்டங்கள் மற்றும் குடியிருப்புகளில் புகுந்து அங்கு வைக்கப்பட்டுள்ள அரிசி, புண்ணாக்கு உள்ளிட்டவற்றை சாப்பிட்டு விட்டுச் செல்வதை யானைகள் வழக்கமாகக் கொண்டுள்ளன.

இந்த நிலையில் தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் என்பவரது தோட்டத்திற்குள் நுழைந்த இரு காட்டு யானைகள் விளைநிலங்களில் இருந்த பயிர்களை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்த தோட்டப்பணியாளர்களின் குடியிருப்பை முகாமிட்டன.



அப்போது ஒரு காட்டு யானை ஒரு வீட்டின் கதவை உடைத்து உள்ளே சாப்பிட ஏதாவது கிடைக்குமா என தேடி அங்கிருந்த காய்கறிகளை எடுத்து சாப்பிட்டது. யானையைப் பார்த்ததும் வீட்டிலிருந்த தோட்ட பணியாளர்கள் அச்சத்தில் உறைந்தனர்.

அப்போது தோட்ட பணியாளர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுக்க மற்றொருவர் வீட்டில் ஒன்னும் இல்ல அவ்வளவுதான். போ சாமி என யானையிடம் கூறி திருப்பி அனுப்ப முயன்றார். இந்த செல்போன் வீடியோ காட்சி தற்போதுசமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...