வாலாங்குளம் ஜங்சன் அருகே பைனாஸ் நிறுவன ஊழியரிடம் முகவரி கேட்பது போல் நடித்து பணம் பறித்த நபர் கைது

உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே பைக் ரிப்பேர் ஆகி நின்றுக்கொண்டிருந்த வைரவமூர்த்தி என்பவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து கத்திமுனையில் ஆயிரம் ரூபாயை பறித்து சென்ற தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவையை அடுத்த பழையூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வைரவமூர்த்தி (37). இவர் பைனான்ஸ் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று ஜூன்.6 பைக்கில் தனது நண்பர் ஒருவருடன் சென்று கொண்டிருந்தார். அவர்கள் உக்கடம் வாலாங்குளம் ஜங்சன் அருகே சென்றபோது, பைக் ரிப்பேர் ஆனது. உடனே வைரவமூர்த்தியின் நண்பர் மெக்கானிக்கை அழைத்து வர சென்றார்.

அப்போது தனியாக நின்றிருந்த வைரவமூர்த்தியிடம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் குனியமுத்தூருக்கு எப்படி செல்ல வேண்டும் என முகவரி கேட்டுக்கொண்டே அருகே வந்த அவர் திடீரென கத்திமுனையில் மிரட்டி அவரிடம் இருந்த 1000 ரூபாயை பறித்து கொண்டு தப்பி சென்றார்.

பின்னர் இது குறித்து வைரவமூர்த்தி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், பணம் பறித்தது தெலுங்குபாளையம் சொக்கம்புதூரை சேர்ந்த தர்மராஜ்(30) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...