கோவையில் இருந்து மாதந்தோறும் 80 டன் இன்ஜினியரிங் பொருட்கள் அமெரிக்கா, ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி

ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 டன் மற்றும் சிங்கப்பூர் விமானத்தில் 1 டன் வீதம் பயணிகளுடன், ‘பாண்டட் டிரக்' சேவை மூலம் சரக்குகளும் கொண்டு செல்லப்படுகிறது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை விமான நிலையத்தில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப் பிய நாடுகளுக்கு மாதந்தோறும் 80 டன்னுக்கும் அதிகமாக வார் படம், வால்வு உள்ளிட்ட இன்ஜினியரிங் பொருட்கள் 'பாண்டட் டிரக்' சேவை மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கோவை விமான நிலைய வளாகத்தில் விமான சரக்கக அலுவலகம் அமைந்துள்ளது.

கோவையில் இருந்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்ல 'பாண்டட் டிரக்' சேவை வழங்கப்படுகிறது. இவற்றின் மூலம் பல்வேறு வெளிநாடுகளுக்கு தொழில்துறை சார்ந்த பொருட்கள் தொடர்ந்து அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, கோவையில் இருந்து ஷார்ஜா வுக்கு வாரத்தின் அனைத்து நாட்களும், சிங்கப்பூருக்கு வாரத்தில் ஐந்து நாட்களும் சேவை வழங்கப்படுகிறது.

ஷார்ஜாவுக்கு விமானத்தில் ஒவ்வொரு முறையும் 3 டன் மற்றும் சிங்கப்பூர் விமானத்தில் 1 டன் வீதம் பயணிகளுடன், சரக்குகளும் கொண்டு செல்லப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் காய்கறி மற்றும் உணவு சார்ந்த பொருட்களே அதிகம். இதுதவிர கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் வார்ப்படம், வால்வு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவற்றுக்கு 'பாண்டட் டிரக்' சேவை உதவுகிறது.

கோவையில் இருந்து சாலை வழியாக கொச்சி, பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மாதந்தோறும் 80 டன்னுக்கும் அதிகமான பொருட்கள் கோவையில் இருந்து விமானம் மூலம் பல்வேறு உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

‘பாண்டட் டிரக்’ சேவை கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான சேவை அதிகம் இல்லாத காரணத்தால், டிரக் வசதி உடன் கோவை விமான சரக்கக அலுவலகத்தில் பல்வேறு பொருட்கள் புக்கிங் செய்யப்படும். இவை கோவையில் இருந்து சாலை வழியாக கொச்சி, பெங்களூரு விமான நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து, எமிரேட்ஸ், லுப்தான்ஸா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்கள் மூலம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். கோவையில் இந்த சேவை நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...