உரிமம் இன்றி வாகனம் ஓட்டுவோருக்கும், வாகனம் கொடுத்தோருக்கும் ''ரூ.500'' அபராதம்

பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கோடை விடுமுறை துவங்கிவிட்ட நிலையில் பெரும்பாலான மாணவர்கள் சாலையில் வாகனங்களை இயக்கி வருகின்றனர். இதனால் அதிகப்படியான விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் வகையில் கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் புதிய சட்டம் ஒன்றினை அமல்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் கூறுகையில், "பள்ளிகளில் தேர்வுகள் முடிவுற்று தற்போது விடுமுறை நாட்கள் துவங்கியுள்ளன. இவ்விடுமுறை நாட்களில் அதிகப்படியான மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்களின் வாகனங்களை சாலையில் ஓட்டி வருகின்றனர். அவ்வாறாக வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு 18 வயது பூர்த்தி அடையாத நிலையில் அவர்கள் ஓட்டுநர் உரிமமின்றி சாலையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் நேரிடுகிறது.

மேலும், இவ்வாறாக வாகனம் ஓட்டும் போது வாகனத்தை இயக்கும் மாணவர்களுக்கு மட்டுமின்றி இவ்விபத்தில் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் கூட சேதங்கள் ஏற்பட்டு பாதிப்படைகின்றனர்.

கோவை மாநகரில் கடந்த 2016 ஆம் ஆண்டில் மட்டும் சாலை விபத்துகளில் 34 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதில், 3 முதல் 4 உயிரிழப்புகள் ஓட்டுநர் உரிமம் பெறாத பள்ளி மாணவர்களே.

இவ்வருடத்தில் தற்போது கோடை விடுமுறையினை கழிக்க மாணவர்கள் வாகனம் ஓட்டும் போது ஏற்படும் விபத்துகளை தவிர்க்க அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, முறையான உரிமம் இன்றி வாகனம் ஓட்டும் மாணவர்களுக்கு ரூ.500 அபராதம் மற்றும் அவர்களுக்கு வாகனம் தந்த பெற்றோர், நண்பர்கள், உறவினர்களுக்கு அபராதம் ரூ.500 என வசூலிக்கப்படுகிறது.

கோவையில் கடந்த சில நாட்களில் மட்டும் இதுதொடர்பான 1100 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மீது கவனம் செலுத்தி, சாலை விபத்துகளை தவிர்க்க வேண்டும்" இவ்வாறு கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் தெரிவித்தார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...