காங்கேயம் சிவன்மலை கோவில் படிக்கட்டில் படியேறிய பச்சை பாம்பு - வீடியோ வைரல்

நேற்று முன்தினம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படிக்கட்டில் ஏராளமான பக்தர்கள் படியேறி கொண்டிருந்த நிலையில் இவர்களுடன் சுமார் 5 அடி நீளம் கொண்ட பச்சை பாம்பும் படியேறி சென்றது. இதை கண்ட பக்தர்கள் பயந்து கொண்டு நகர்ந்து சென்று படியேறினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் படிக்கட்டுகளில் பக்தர்கள் படியேறி கொண்டிருந்த நிலையில், இவர்களுடன் சிறிய பச்சை பாம்பும் படியேறி சென்றது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகின்றது.



காங்கேயம் அடுத்த சிவன்மலையில் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலமாக விளங்கி வருவது சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். இக்கோவிலில் முருகன் சுப்பிரமணிய சுவாமியாக வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இக்கோவில் அறநிலைத்துறை கட்டுபாட்டில் இயங்கி வருகிறது.

தினசரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் இந்த மலையில் அரியவகை தாவரங்கள், மரங்கள் மற்றும் சிறு சிறு உயிரினங்களான பல்லி, பாம்பு, உடும்பு, கீரி, மரநாய் மற்றும் பறவைகள் ஆகியவை வாழ்ந்து வருகின்றன.



இந்த நிலையில் நேற்று முன்தினம் மலைக் கோவில் படிக்கட்டில் ஏராளமான பக்தர்கள் படியேறி கொண்டிருந்த நிலையில் இவர்களுடன் சுமார் 5 அடி நீளம் கொண்ட பச்சை பாம்பும் படியேறி சென்றது. இதை கண்ட பக்தர்கள் பயந்து கொண்டு நகர்ந்து சென்று படியேறினர்.

மேலும் சிலர் சிறிது நேரம் இந்த காட்சியை கண்டு களித்தனர். இதனை அடுத்து இந்த பாம்பு படிக்கட்டில் இருந்து திசை மாறி மலைகளில் உள்ள செடி கொடிகளுக்குள் சென்றுவிட்டது. இதனை படம்பிடித்து சிலர் சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர். அரியவகை விலங்குகள் மற்றும் விச ஊர்வனங்கள் தென்படும் பட்சத்தில் இதனை பிடித்து பாதுகாப்பான காப்புக்காட்டு பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என வனத் துறையினருக்கு பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...