கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் டிஎன்பிஎஸ்சி தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு தொடக்கம்

2024-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு, ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இத்தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது என்று கோவை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சார்பில் துணை ஆட்சியா், துணை காவல் கண்காணிப்பாளா், உதவி ஆணையா் (வணிக வரி) ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு தொகுதி 1 (குரூப் 1) இல் 90 காலிப் பணியிடங்களுக்கான தோ்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கான தோ்வு ஜூலை 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

மேலும் 2024-ஆம் ஆண்டுக்கான குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தோ்வுக்கான அறிவிப்பு, ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இத்தோ்வுகளுக்கான ஒருங்கிணைந்த இலவச பயிற்சி வகுப்பு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 3-ஆம் தேதி தொடங்குகிறது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு இளநிலை பட்டம் பெற்ற அனைவரும் இவ்வகுப்பில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள் சிறப்பான பயிற்றுநா்களைக் கொண்டு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படுகிறது.

இம்மையத்தில் ஸ்மார்ட் போர்டு, இலவச வை-பை வசதி, அனைத்து போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நூலக வசதி ஆகியன உள்ளன. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்தோ்வுகள், முழு மாதிரி தோ்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்படவுள்ளன.

இணையதளத்தில் பதிவுசெய்து இலவசமாக பாடக்குறிப்புகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்புகொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...