கல்லாறு ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதி பெண் உயிரிழப்பு

கல்லாறு ரயில்வே கேட் அருகே டிப்பர் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில், பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், மேலும் இரண்டு குழந்தைகள் காயமடைந்தனர்.


கோவை: கோவை மாவட்டம், சின்னத்தடாகம் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் தனசேகரன் (37), கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றி வருகிறார். இவர், தற்போது அயல் பணி காரணமாக சென்னையில் பணியாற்றி வருகிறார். இவரின் மனைவி பவித்ரா (35), இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.

தனசேகர் மற்றும் அவரின் சகோதரர் சுரேஷ்குமார் ஆகியோர் கூட்டுக் குடும்ப மாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், பவித்ரா தனது மகள் அன்பு (4), சுரேஷ் குமாரின் மகள் கயல் (8) ஆகியோருடன் ஒரு இருசக்கர வாகனத்திலும், தனசேகரன் தனது குழந்தை மற்றும் தனது சகோத ரரின் குழந்தையுடன் மற்றொரு இருசக்கர வாகனத்திலும் டீச்சர்ஸ் காலனியில் உள்ள பவித்ராவின் பெற்றோர் வீட்டுக்கு (மே.27) சென்றுள்ளனர். 

பின்னர், அங்கிருந்து குழந்தைகளை அழைத்துக்கொண்டு மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள கல்லாறு பழப் பண்ணைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். பழப் பண்ணை மூடி இருந்ததால் மீண்டும் வீட்டுக்குப் புறப்பட்டுள்ளனர்.

அப்போது மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் கல்லாறு ரயில்வே கேட் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி, பவித்ரா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், வாகனத்தில் இருந்த மூவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் சம்பவ இடத்திலேயே பவித்ரா உயிரிழந்தார். 

மேலும், படுகாயமடைந்த குழந்தைகள் அன்பு, கயல் ஆகியோரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸார் பவித்ராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநர் அனு என்பவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...