கோவை வழித்தடத்தில் இயங்கும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயிலின் சேவை ஜூலை மாதம் வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்படுவதாக பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


கோவை: பாலக்காடு ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோடை விடுமுறையையொட்டி கேரள மாநிலம் கொச்சுவேலியில் இருந்து சென்னைக்கு, கோவை வழித்தடத்தில் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மே மாதத்துடன் இச்சேவை நிறைவடைய உள்ள நிலையில், ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஜூன் 5, 12, 19, 26 மற்றும் ஜூலை 3 ஆகிய தேதிகளில் (புதன்கிழமை) சென்னையில் இருந்து பிற்பகல் 3.45 மணிக்கு புறப்படும் சென்னை-கொச்சுவேலி சிறப்பு ரயில் (எண்: 06043) மறுநாள் காலை 8.45 மணிக்கு கொச்சுவேலி ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

மறு மார்க்கத்தில் ஜூன் 6, 13, 20, 27 மற்றும் ஜூலை 4 ஆகிய தேதிகளில் (வியாழக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்படும் கொச்சுவேலி-சென்னை சிறப்பு ரயில் (எண்:06044) மறுநாள் காலை 10.40 மணிக்கு சென்னை ரயில் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயில் கொல்லம், செங்கன்னூா், திருவல்லா, கோட்டயம், எா்ணாகுளம் டவுன், ஆலுவா, திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...