ஓடிடி சரியா, தவறா என்பது பிற்காலத்தில் தெரியவரும் - கோவையில் நடிகர் ஹிப்ஹாப் ஆதி பேட்டி

ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது. அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது. இன்னும் சில ஆண்டுகள் போனால், என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம் என்று நடிகர் ஹிப்ஹாப் ஆதி பேசியுள்ளார்.


கோவை: கோவை ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில் PT SIR திரைப்பட பிரமோஷனுக்காக வருகை தந்த அத்திரைப்படத்தின் ஹீரோ ஹிப் ஹாப் ஆதி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களை பார்த்து நேற்று மே.26 கலந்துரையாடினர்.



அப்போது ஹிப்ஹாப் ஆதி கோவை Anthem பாடலையும், வாடி புள்ள வாடி பாடலையும் பாடினார். இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் அவருடன் இணைந்து பாடல்களை பாடினர். பின்னர் அவருடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஹிப் ஹாப் ஆதி, இப்படத்தின் பிரமோசனுக்காக சுற்றி கொண்டே இருப்பதால் யாரும் தூங்கவில்லை. அதனால் பார்ப்பதற்கு ஜாம்பி போல் இருக்கிறோம். இருந்தாலும் உள்ளுக்குள் எனர்ஜியாக இருக்கிறோம். இந்த படம் காமெடி படமாக இருந்தாலும், சீரியஸான விஷயத்தை இப்படத்தில் வைத்திருக்கின்றோம்.

பெரிய நட்சத்திர நடிகர் சிறிய நட்சத்திர நடிகர் என்றெல்லாம் இல்லாமல் படம் நன்றாக இருந்தால் ஓடும். ஓடிடி குறித்தான கேள்விக்கு, அதுவும் ஒரு நல்ல ரீச்சை தருகிறது. திரையரங்குகளில் திரைப்படம் ஓடி முடிந்த பிறகும் பொதுமக்கள் ஓடிடியில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைக்கிறது.

அதேசமயம் ஓடிடியில் பார்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலை இருப்பதால் திரையரங்குகளுக்கு வருகின்ற மன நிலையும் சிறிது குறைந்துள்ளது. அது சரியா தவறா என்பதை தற்போது கூற முடியாது. இன்னும் சில ஆண்டுகள் போக என்ன ஆகப் போகிறது என்பதை பார்க்கலாம்.

இதில் பேசிய இயக்குநர் கார்த்திக் இப்படம் பெண்களுக்கு பிடிக்கிறது. பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைகளுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பது அவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பதுதான் இந்த படம். மக்கள் தற்பொழுது திரைப்படத்தை பிரித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். கதை நன்றாக இருந்தால் குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வந்து பார்க்கிறார்கள்.

செய்தியாளர் சந்திப்பின் இடையே அங்கு வந்த இளம் பெண் ஒருவர் ஹிப் ஹாப் ஆதியை பார்த்தவுடன் தேம்பி தேம்பி அழுதார். ஹிப்ஹாப் ஆதியை பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை என அந்த இளம்பெண் நெகிழ்ச்சியாக கூறினார்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...