கோவை- கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தும் வழித்தடங்களில் தடுப்பு நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது- மாவட்ட வழங்கல் அதிகாரி தகவல்


கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி கடத்தப்படும் 18 வழித் தடங்கள் கண்டறியப்பட்டு அந்த வழிகளில்  தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

கோவை ரயில் நிலையத்தில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் செல்லும் பயணிகள் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட வழங்கல் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தலைமையிலான அதிகாரிகள் கோவை ரயில் நிலையத்தில் நின்று இருந்த திருச்சூர் பயணிகள் ரயிலை சோதனையிட்டனர்.

அப்போது சிறு, சிறு மூட்டைகளாக 1.5 டன் அளவிற்கு ரேசன் அரிசி பயணிகளின் இருக்கைகளின் கீழ் மறைத்து வைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த 1.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்தனர். எனினும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் யாரும் சிக்கவில்லை.

இந்நிலையில் இந்த சோதனை தொடர்பாக பேட்டியளித்த மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன், திருச்சூர் செல்லும் ரயிலில் ரேசன் அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்டு ரேசன் அரிசியை பறிமுதல் செய்ததாக தெரிவித்தார்.

மேலும், கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டம் என்பதால் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு ரேசன் அரிசி அதிகளவு கடத்தப்படுவதாகவும், கோவையில் இருந்து கேரளாவிற்கு அரிசி கடத்தப்படும் 18 வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த 18 வழித்தடங்களில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது எனவும், தற்போது நடைபெற்றுள்ள இந்த சோதனையில் கடத்தல்காரர்கள் யாரும் சிக்கவில்லை எனவும் மாவட்ட வழங்கல் அதிகாரி சரவணன் தெரிவித்தார்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...