கோவை கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான இடம் மீட்பு

கோவையில் கொங்கு நகரில் ரூ.10 கோடி மதிப்பிலான 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை.


கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், 62வது வார்டு ராமநாதரபுரம் அருகே கொங்கு நகர் உள்ளது. இங்கு கடந்த, 1972ம் ஆண்டு கோவை நகராட்சியாக இருந்தபோது, கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் ஒன்றுக்கு, 8.49 ஏக்கர் இடத்தில், 84 மனைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. 

பொது பயன்பாட்டிற்கென, 70 சென்ட் மற்றும், 14 சென்ட் இடம் இரண்டு இடங்களில் ஒதுக்கப்பட்டிருந்தது. நாளடைவில் அவை தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சில இடங்களில் திறந்த வெளியாகவும், சில இடங்களில் கட்டடங்களாகவும் காணப்படுகிறது.

மேலும், ஒப்புதல் வரைபடத்தில் உள்ள, 30 அடி மற்றும் 40 அடி ரோடும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை மீட்டு, பொது பயன்பாட்டுக்கு கொண்டுவருமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம், பல்வேறு தரப்பினரும் மனு அளித்திருந்தனர். 

இந்நிலையில், மத்திய மண்டல உதவி நகரமைப்பு அலுவலர் கோவிந்த பிரபாகர் தலைமையிலான அலுவலர்கள், நேற்று மே.24 ஆக்கிரமிப்பை மீட்டனர். 14 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்துக்கான கேட்டை பூட்டி, 'சீல்' வைத்தனர். 

மற்றொரு பகுதியில் இருக்கும், 70 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தில் காலியாக இருந்த, 25 சென்ட் இடத்தை மீட்டு, அந்த இடத்தில் மாநகராட்சி அறிவிப்பு பலகை வைத்தனர். 

மீதமுள்ள ஆக்கிரமிப்பு இடத்தை மீட்க, மாநகராட்சி சார்பில் 'நோட்டீஸ்' வழங்கப்படவுள்ளது. தற்போது ரூ.10 கோடி மதிப்பிலான, 39 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்டுள்ளோம். மீதமுள்ள இடமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களுக்கு, நோட்டீஸ் வழங்கி மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...