கோவையில் 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

கோவையில் 27 வயதான வாலிபர் நட்பு மூலம் ஈர்த்து 17 வயது சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது காரணமாக 20 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 15 ஆயிரம் அபராதம் வழங்கப்பட்டது.


கோவை: கோவை ஆறுமுக கவுண்டனூரை சேர்ந்தவர் செந்தில் (வயது 27) இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் நட்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்திச் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமியின் தந்தை மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

அதில் செந்தில் அந்த சிறுமி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் செந்திலை கைது செய்தனர். 

இது தொடர்பாக கோவையில் உள்ளபோக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று மே.24 தீர்ப்பு கூறப்பட்டது. 

அதில் குற்றம் சாட்டப்பட்ட செந்திலுக்கு 20 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி குலசேகரன் தீர்ப்பு கூறினார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு தரப்பில் ரூ4 லட்சம் இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து செந்திலை போலீசார் பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்று அடைத்தனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...