நெகமம் காவல் நிலைய எல்லையில் 270 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் - 5 பேர் கைது

நெகமம் காவல் நிலைய எல்லையில் பறிமுதலாகிய 270 கிலோ தடையிடப்பட்ட புகையிலை பொருட்கள்; போலீசார் ஐந்து பேரை கைது செய்தனர்.


கோவை: போதைப்பொருள் இல்லா கோவையை உருவாக்கும் பொருட்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இன்று (25.05.2024) நெகமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

அதன் பேரில், போளிகவுண்டன்பாளையம் அருகே வாகன தணிக்கை செய்த போது நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் ஆல்வின்(30), கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது மகன் சர்ஃபுதீன்(38), அனிஃபா மகன் இஸ்மாயில் (29), பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த ஜெயராஜ் மகன் இமானுவேல் (38) மற்றும் துரைப்பாண்டியன் மகன் பாலசுப்பிரமணி(47) ஆகிய 5 பேரை கைது செய்தனர். 

பின்னர் அவர்களிடமிருந்து ரூ. 3,00,000 மதிப்புள்ள 270 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், இருசக்கர, நான்கு சக்கர வாகனம்-1 மற்றும் ரூ. 1,99,000 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...