கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை செய்த 4 பேர் கைது

74 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் போலி மதுவா அல்லது டாஸ்மாக் கடையில் வாங்கியதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.



Coimbatore: சிங்காநல்லூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மோகன் முத்துக்குமார் நேற்று முன்தினம் (மே.22) இருகூர் ,ஏ.ஜி. புதூரில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்குள்ள தென்னந்தோப்பு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில், பில்லு வலசை சேர்ந்த பிரபு (வயது 35) கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் இருந்து 31 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல சின்னியம்பாளையம் டாஸ்மாக் கடை எண்:1840 அருகே உள்ள பெட்டி கடையில் நேற்று (மே.22) மது பாட்டில்களை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம், மணல் மேல குடியைச் சேர்ந்த காளிதாஸ் (48) பிரவீன் குமார் (24) ஆகியோர் கைது செய்தனர். பின்னர் 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவைகள் போலி மதுவா? டாஸ்மாக் கடையில் வாங்கியதா?என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...