கோவை லங்கா கார்னரில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைப்பு - வாகன ஓட்டிகள் நிம்மதி

லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது. இதனால் நேற்று கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை. இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவையில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்த நாட்களில் நகரின் பல்வேறு இடங்களில் பல மணி நேரம் தொடர் கனமழை பெய்தது.

இது பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தினாலும், சாலைகளின் நிலை பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. பொதுவாக மழை வரும்போதெல்லாம் கோவையில் லங்கா கார்னர் ரயில்வே மேம்பாலம், அவினாசி சாலை மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி மேம்பாலத்தின் கீழே மழை நீர் தேங்கும்.

தண்ணீரில் மிதந்தபடி சென்று விடலாம் என்று எண்ணி அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் மழை நீரில் தத்தளித்து பழுதாகி நிற்கும் நிலை நீண்ட நாட்களாக தொடர்ந்து வருகிறது.

இதற்கு மாநகராட்சி தரப்பில் வெவ்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டும் பயனில்லாமல் இருந்து வந்தது. இதனிடையே மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், மழை நீரை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்தார்.

வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. மழைநீர் வடிகால்கள் மேம்படுத்தப்பட்டன. ராட்சத மின் மோட்டார்கள் கொண்டு மழை நீர் அகற்றப்பட்டது. லங்கா கார்னரில் மழைநீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டது.



இதனால் நேற்று மே.22 மாலை நகரில் கனமழை பெய்த போதும், மேம்பாலங்களுக்குக் கீழே தண்ணீர் தேங்கவில்லை.



இது வாகன ஓட்டிகள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...