திமுக அரசின் அழுத்தம் காரணமாக அடிக்கடி சிபிசிஐடி விசாரணை – கோவையில் பாஜக மாநில பொருளாளர் புகார்

சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னையில் இருந்து போலீசார் வந்து கேள்விகள் கேட்டனர், வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை கணபதி பகுதியில் உள்ள பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் இல்லத்தில் இன்று சென்னையில் இருந்து வந்த சிபிசிஐடி அதிகாரிகள் 10-க்கும் மேற்பட்டோர் ரூ.4 கோடி பணம் பிடிப்பட்டது குறித்து விசாரணை நடத்தினர்.



விசாரணை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், ரூ.4 கோடி ரூபாய் பணம் பிடிபட்டது தொடர்பாக விசாரிக்க நேற்று சிபிசிஐடி சார்பில் சம்மன் கொடுக்கப்பட்டது. கட்சி நிகழ்வுகளில் பங்கேற்க வேண்டியிருப்பதால் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை வர முடியாது என்றும், 10 நாட்கள் அவகாசம் தேவை என்றும் சிபிசிஐடிக்கு கடிதம் கொடுக்கப்பட்டதை சிபிசிஐடி ஏற்றுக் கொண்டிருந்தனர்.

நான் வெளியூர் கிளம்பி கொண்டு இருந்த நேரத்தில் திடீரென சிபிசிஐடி போலீசார் நோட்டீஸ் கொடுக்காமல் விசாரிக்க வந்தனர். அவர்களை வரவேற்று கேட்ட கேள்விக்கு பதில் அளித்து உள்ளதாக தெரிவித்தார்.

தகவல் சொல்லாமல் பத்து நாள் அவகாசம் கேட்ட பின்னரும் கூட வந்தார்கள். சட்டபூர்வமாக அவர்கள் கேட்ட கேள்விக்கு மரியாதை கொடுத்து பதில் அளித்தேன். தமிழக அரசின் அழுத்தம் காரணமாக பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக காவல் துறை ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் விசாரணை கூடாது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறோம். அதற்கான உத்தரவு நாளை வந்துவிடும் அதற்குள் பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும், பாஜக மீது களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் போலீசார் அனுப்பப்பட்டுள்ளனர்.

விசாரணையை எதிர்கொள்ள நாங்கள் தயங்கவில்லை. மடியில் கனம் இல்லை. ஆனால் திமுக அரசின் நோக்கம் துன்புறுத்துதல், பரபரப்பை ஏற்படுத்துவது.

சென்னை சிபிசிஐடி டிஎஸ்பி சசிதரன் தலைமையில் சென்னையில் இருந்து போலீசார் வந்து கேள்விகள் கேட்டார்கள். மேலும் வழக்கிற்கு சம்பந்தம் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டது.

நேற்று பிற்பகல் ஒன்றே கால் மணிக்கு கடிதம் கொடுத்திருக்கிறோம். இன்று கிளம்பி கொண்டு இருந்த பொழுது போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்கு வந்து நிற்கின்றனர். சட்டத்துக்கு புறம்பாக எதிராக தகவல் தெரிவிக்காமல் வருகின்றனர். திமுக அரசின் நோக்கம் பாஜகவை கலங்கப்படுத்த வேண்டும் என்பது.

நான்கு கோடி ரூபாய் பணத்துக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை என்பதை சொல்லிவிட்டோம். உண்மையான தகவல்களை விசாரணை அதிகாரியிடம் சொல்லிவிட்டோம். கடந்த ஒரு வாரமாக நான்கு கோடி ரூபாய் பாஜகவின் பணம் என தவறாக சித்தரித்து வருகின்றனர். இதற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. இதை வெளிப்படையாக மக்களுக்கு சொல்கிறோம்.

உள்நோக்கம் மட்டுமே போலீஸ் விசாரணைக்கு காரணம் என்றும், திமுக அரசு பாஜகவை களங்கப்படுத்துவதற்கான முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது. அது மிகப்பெரிய அளவில் தோல்வியையும், அவமானத்தையும் சந்திக்கும் தவறான புகாரை சொல்கின்றனர்

இன்று காலை 9 மணிக்கு வந்த சிபிசிஐடி போலீசார் 11 மணி வரை 2 மணி நேரம் விசரணை மேற்கொண்டனர். சென்னை சிபிசிஐடியில் இருந்து 6 பேர், உள்ளூரில் இருந்து 6 பேர் மற்றும் காவலர்கள் என 20-க்கு மேற்பட்ட போலீசார் 3 வாகனங்களில் வந்திருந்தனர் எனக் அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...