கோவை வெரைட்டி ஹால் ரோட்டில் சாலையை சீரமைத்த காவலருக்கு குவியும் பாராட்டு

போக்குவரத்துக் காவலர் தமிழ்செல்வன், பழுடைந்த சாலையில் ஜல்லிக்கற்களை கொட்டி சீரமைத்தார். போலீஸ் உடையில் சாலையை சீரமைத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, இணையதளம் மூலமாக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.


கோவை:கோவையில் ஒரு சில பகுதியில் தரமற்ற சாலை அமைத்திருப்பதால் சாலை குண்டு குழியுமாக காட்சியளித்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர். மேலும் கடந்த ஒரு வார காலமாக கோவையில் மழை பெய்ததால் சில பகுதிகளில் சாலைகள் பழுதடைந்த நிலையில் உள்ளன.

அதனைத் தொடர்ந்து கோவை குட்செட் சாலை ஒருபுறம் பழுதடைந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய சாலை என்பதால் அதிகளவில் இந்த சாலையில் வாகனங்கள் கடந்து செல்வது வழக்கம்.



சாலை பழுதடைந்ததால் அவ்வப்போவது கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. சாலையை சீரமைக்கும் வகையில் வெரைட்டி ஹால் போக்குவரத்துக் காவலர் தமிழ்செல்வன் அந்த பகுதியில் பணி பார்த்து கொண்டிருந்தபோது சாலை பழுதானதை கண்டு அருகியிருந்த ஜல்லிக்கற்களை கொண்டு பழுதான பகுதியில் கற்களை கொட்டி சாலையை சீரமைத்தார்.



தமிழ்ச்செல்வன் போலீஸ் உடையில் சாலையை சீரமைத்து காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. இதனையடுத்து அவருக்கு இணையதளம் மூலமாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...