கொடுவாய் பகுதியில் தொடர்ந்து நடக்கும் வெறிநாய் தாக்குதல்கள் - விவசாயிகள் வேதனை

திருப்பூர் கொடுவாய் பகுதியில் வெறிநாய்கள் தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சம்பவங்கள் நடந்து வருவதால் விவசாயிகள் கடும் வேதனையில், நடவடிக்கை எடுக்க கோரிக்கை.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கொடுவாய் எல்லப்பாளையம் புதூர் ஊராட்சிக்குட்பட்ட பங்காம் பாளையம் மற்றும் சாய்ராம் நகர் பகுதியில் கடந்த சில நாட்களாக தெருக்களில் அலையும் நாய்களுக்கு வெறிபிடித்து கால்நடைகள் மற்றும் மனிதர்களை தாக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நாளுக்கு நாள் வெறி நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாகவும் அவை வீடுகள் மற்றும் தோட்டத்தில் வளர்க்கப்படும் கால்நடைகளை தாக்குவதாகவும் அப்பகுதி ஊர்ப் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.



எல்லப்பாளையம் புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட பங்காம்பாளையம் பகுதியில் வசிக்கும் முத்துசாமி என்ற விவசாயி தோட்டத்தில் கட்டப்பட்டிருந்த பசு கன்றுக்குட்டியை நல்லிரவு சுமார் 1 மணி அளவில் வெறிநாய் கூட்டம் சுற்றி வளைத்து கடித்து கொன்றுள்ளது.



மேலும் கன்று குட்டியை நாய்கள் வேட்டையாடுவதை பார்த்த தாய் மாடு கட்டிவைத்த பகுதியில் சுற்றி சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து சத்தம் கேட்டு வந்த பசுவின் உரிமையாளர் தோட்டத்திற்கு சென்று பார்த்த போது நாய்கள் கடித்ததில் இறந்து கிடந்துள்ளது. மேலும் இது போன்ற சம்பவம் தினந்தோறும் நடைபெறுவதாகவும், இது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இன்றுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இந்த வெறிநாய்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளின் உயிரை காவு வாங்குவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் இது சம்பந்தப்பட்ட துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மனித உயிர்களை காவு வாங்குவதற்குள் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் விவசாயிகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த போவதாகவும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...