டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் வீட்டை சுற்றி பொதுமக்கள் தூய்மையாக வைக்குமாறு கோவை மாநகராட்சி ஆணையாளர் அறிவுரை

பொது மக்கள் தம் வீடுகள்,கட்டுமான இடங்கள், வணிக வளாகங்கள், பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும் என்று மாநகராட்சி ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.


கோவை: கோயமுத்தூர் மாநகராட்சி 100 வார்டுகளுக்குட்பட்ட அனைத்து பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மாநகராட்சி ஆணையரின் அன்பான வேண்டுகோள், தற்போது கோயமுத்தூர் மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை மழை தீவிரம் அடைந்துள்ளதால், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏ.டி.எஸ் கொசுக்கள் உற்பத்தியாவதற்கான சாதகமான காலநிலை நிலவுகிறது.

மேலும், பொது மக்கள் அவர் தம் வீடுகள்/கட்டுமான இடங்கள்/வணிக வளாகங்கள்/பணிபுரியும் அலுவலங்கள் மற்றும் அங்காடிப்பகுதிகளில் உள்ள நீர் சேகரிப்பு கொள்கலன்களை கொசு புகாதவாறு மூடி வைக்கவேண்டும். , வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தேவையற்ற உடைந்த பொருட்கள் இருப்பின் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வீட்டு கூரைகளில் டையர் உள்ளிட்ட தேவையற்ற பொருட்கள் போடுவதை முற்றிலும் தவிர்க்கவேண்டும்.

டெங்கு காய்ச்சல் தடுப்புபணியில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு முழுஒத்துழைப்பு நல்கவேண்டும். மேலும், காய்ச்சல் ஏற்படின் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்/மருத்துவமனைகளில் தகுந்த சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு மாநகராட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். குடிநீரை காய்ச்சி ஆற வைத்து பருகுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...