ஏப்ரல் 8ம் தேதியன்று கைத்தறி மற்றும் ஜவுளி உதவி இயக்குநர் பதவிக்கான போட்டித் தேர்வு நடைபெறும்

தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையத்தின் மூலம் வரும் ஏப்ரல் 8ம் தேதியன்று முற்பகல் மற்றும் பிற்பகல் என இருவேளைகளில் கைத்தறி மற்றும் ஜவுளி உதவி இயக்குநர் பதவிக்கான போட்டித் தேர்வு நடைபெறவுள்ளது.

கோவையில் 2 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை 818 நபர்கள் எழுதுகின்றனர். இதனை நடத்த 3 முதன்மை கண்காணிப்பாளர்கள், ஒரு மொபைல் அலுவலர், 2 வீடியோ கிராபர்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய ஆய்வு அலுவலர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தால் தடையில்லா மின்சார வசதி செய்யப்பட்டுள்ளது.

இத்தேர்வு எழுதும் தேர்வர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வழங்கப்பட்ட நுழைவுச் சீட்டு கொண்டு செல்ல வேண்டும் எனவும், தேர்வு அறைக்குள் மொபைல் போன் உள்ளிட்ட மின்னியக்க கருவிகளை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுபட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் முதன்மை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...