கோவையில் குடிபோதையில் பேருந்தை இயக்கியதில் ஒருவர் உயிரிழப்பு – விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநனருக்கு சக பேருந்து ஓட்டுனர்கள் தர்ம அடி

காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் குடிபோதையில் தனியார் பேருந்து ஓட்டுனர் பேருந்தை இயக்கியதில், இரண்டு பேருந்துக்குள் நடுவில் சிக்கி பயணி ஒருவர் உயிரிழந்தார். இதனையடுத்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனரை சக ஓட்டுநர்கள் சரமாரியாக அடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் தனியார் பேருந்து மோதியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை காந்திபுரம் நகரப்பேருந்து நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இது கோவையின் முக்கியமான பேருந்து நிலையமாகும். இந்த பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று காலை தனியார் பேருந்து ஒன்று பேருந்து நிலையத்திற்குள் வந்த நிலையில் வாகனத்தை பின்னோக்கி இயக்கியதில் இரண்டு பேருந்திற்கு நடுவில் சிக்கி பேருந்திற்கு காத்திருந்த பயணி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.



இதனால் சக பயனிகள் கூச்சலிட்டு அலறியடித்து ஓடினர்.. உடனடியாக அங்கு இருந்த சக பேருந்து ஊழியர்கள் வாகனத்தை நிறுத்தி ஓட்டுனரை கீழே இறக்கியதில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் குடி போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த ஓட்டுனரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



மேலும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுனர் கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்த திருநாவுக்கரசு என்பதும், விபத்தில் பலியானவர் சிவக்குமார் என்பதும் தெரியவந்துள்ளது.

Newsletter

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...