யூடியூபர் சவுக்கு சங்கருக்கு காவல் நீட்டிப்பு

கோவையில், யூடியூபர் சவுக்கு சங்கரை சைபர் க்ரைம் காவல்துறை கைது செய்தது. கையில் எலும்பு முறிவை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டு, நீதிமன்றம் காவல் நீட்டிப்பு வழங்கியது.


கோவை: யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல்துறையினர் கடந்த நான்காம் தேதி தேனியில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் அதனை விசாரித்த கோவை 4வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சரவணபாபு ஒருநாள் கஸ்டடி வழங்கி அனுமதி அளித்தார். அதனை தொடர்ந்து இன்று (மே.14) மாலையுடன் கஸ்டடி முடிந்ததை தொடர்ந்து சவுக்கு சங்கரை போலிசார் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்நிலையில் சவுக்கு சங்கரின் நீதிமன்ற காவலை 28ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதனிடையே தனக்கு கை முறிந்துள்ளதால் தனியாக இருக்க முடியாது எனவும் தன்னை மெண்ட்டல் பிளாக்கில் இருந்து வேறு பிளாக்கிற்கு மாற்றுமாறு சவுக்கு சங்கர் கோரிக்கை வைத்தார். தொடர்ந்து அதனை மனுவாக அளிக்கும் படியும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக் குழுவிற்கு பரிந்துரை செய்வதாகவும் நீதிபதி பதிலளித்தார். பின்னர் சவுக்கு சங்கரை காவல்துறையினர் மீண்டும் கோவை மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...