தாராபுரம் அருகே நரிக்குறவர் காலனியில் கட்டப்படவுள்ள வீடுகளுக்கு நில அளவீடு - ஊராட்சி மன்றத் தலைவர் நேரில் ஆய்வு

கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்றத் தலைவர் செல்வி ரமேஷ் நரிக்குறவர் காலனிக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் சிதிலமடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி, நில அளவீடு செய்து 31 வீடுகளுக்கான இடங்களை அளவீடு செய்யும் பணியை நேரில் பார்வையிட்டார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.அம்மாபட்டி நரிக்குறவர் குடியிருப்பு வீடுகள் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. தற்போது, சிதிலமடைந்த நிலையில் குடியிருப்பதற்கு அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதால், மிகவும் சிரமப்பட்டு வருவதாக தாராபுரத்தில் நடைபெற்ற அரசு விழா ஒன்றில் செய்தித் துறை அமைச்சர் மு.பே.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோரிடம் நரிக்குறவர் இன மக்கள் தெரிவித்தனர்.

இதனால், தங்களுக்கு புதிய வீடுகள் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இக் காலனி மக்களின் கோரிக்கைகளை பரிசீலனை செய்த தமிழ்நாடு அரசு, தாராபுரம் சி.அம்மாபட்டி நரிக்குறவர் காலனியில் 2023- 2024 ஆம் ஆண்டுக்கான பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மிகவும் பழுதடைந்து இருந்த 31 வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்திவிட்டு தலா 5 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய வீடுகளை விரைவாக, தரமானதாக கட்டித் தர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இதற்கான தொகை ரூ.1 கோடியே 55 லட்சத்தை ஒதுக்கீடு செய்து பணிகளை விரைந்து முடிக்க திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜூவுக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து கடந்த இரு தினங்களுக்கு முன் தாராபுரம் நரிக்குறவர் காலனியை நேரில் வந்து பார்வையிட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், வீடு கட்டும் பணிகளை துவங்கும் முன் ஏற்கனவே உள்ள பழுதடைந்த வீடுகள் அனைத்தையும் அப்புறப்படுத்திவிட்டு நவீன வசதியுடன் கூடிய வீடுகளை கட்டுவதற்கு ஏற்ப அக்குடியிருப்பு பகுதியில் நில அளவீடு செய்து பணிகளை துவங்க உத்தரவிட்டார்.



இதையடுத்து தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவிந்தசாமி, தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன், ஆகியோர் முன்னிலையில் பழைய குடியிருப்புகளை அகற்றி அப்பகுதியை தூய்மைப்படுத்தி அளவீடு செய்யும் பணி துவங்கியது.



கவுண்டச்சிபுதூர் ஊராட்சி தலைவர் செல்வி ரமேஷ் நரிக்குறவர் காலனிக்கு நேரில் வந்து கள ஆய்வு செய்து பாதுகாப்பான முறையில் சிதிலமடைந்த வீடுகளை அப்புறப்படுத்தி, நில அளவீடு செய்து 31 வீடுகளுக்கான இடங்களை அத்து செய்யும் பணியை நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின் போது வார்டு கவுன்சிலர் நர்மதா ஈஸ்வரன், ஊராட்சி செயலாளர் நாகராஜன் மற்றும் நில வருவாய் ஆய்வாளர்கள், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...