கோவை 12-வது வார்டில் மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம், 12-வது வார்டுக்குட்பட்ட ராமலிங்கம் காலனி, கே.கே.புதூர் பகுதியில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதை கோவை மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதி இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் வசிக்கும் மக்களின் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருவதையும், ஜி.கே.சுந்தரம் வீதியிலுள்ள திறந்தவெளி கிணற்றின் அபிவிருத்தி பணிகளையும் மாநகராட்சி துணை ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது, மாநகராட்சி துணை ஆணையர் ப.காந்திமதியுடன், நகர்நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், உதவி ஆணையர் கே.ராமைய்யா, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...