உதகை தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி தொடக்கம்

உதகை மலை ரயில் குகையில் இருந்து வெளியில் வருவது போல 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் மலர்களை கொண்டு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்துள்ளது.


நீலகிரி: உதகை தாவரவியல் பூங்காவில் 126வது மலர் கண்காட்சி இன்று மே.10 தொடங்கியது.



உதகை மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 35 அடி உயரம் 44 அடி அகலத்திலான டிஸ்னி வேர்ல்ட் முகப்பு பகுதி மற்றும் அந்த கதாபாத்திரத்தில் வரும் சிறுவர்கள் ஆகியவை 1,20,000 மலர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.



அதேபோல சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்ந்து வரும் உதகை மலை ரயில் குகையில் இருந்து வெளியில் வருவது போல 35 அடி நீளத்தில் 22 அடி அகலத்தில் 80 ஆயிரம் மலர்களை கொண்டு தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.



மேலும் 126 வது மலர் கண்காட்சி மலர் பதாகை முப்பதாயிரம் கொய் மலர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் 15 ஆயிரம் மலர்களைக் கொண்டு சிறு சிறு மலர் அலங்காரங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.



மலர் அலங்கார மேடைகளில் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிப்பதற்காக 72 இனங்களில் 388 வகையான 35,000 மலர் தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 126வது மலர் கண்காட்சி மற்றும் 19வது ரோஜா காட்சியை தலைமை செயலர் சிவதாஸ் மீனா மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...