பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு - 94.01 சதவீதம் பெற்று கோவை மாவட்டம் 12வது இடம் பிடிப்பு

பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி இந்தாண்டு 12வது இடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.


கோவை: 10ஆம் வகுப்பு பொது தேர்வுகள் கடந்த 26.03.24 துவங்கி 08.04.24 அன்று முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகள் இன்று (மே.10) வெளியாகி உள்ளது. நடந்து முடிந்த தேர்வில் மாணவர்கள் 4,47,203 பேரும், மாணவிகள் 4,47,203 பேர் என மொத்தம் 8,94,264 பேர் தேர்வு எழுதிய நிலையில் 8,18,743 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.



மாணவர்களை விட 5.95% மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும் மாற்று திறனாளிகள் 13510 தேர்வு எழுதிய நிலையில் 12491 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதல் மூன்று இடங்களை அரியலூர், சிவகங்கை, ராமநாதபுரம் பெற்றுள்ள நிலையில் கோவை மாவட்டம் 94.01% பெற்று 12-வது இடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் 19614 மாணவர்களும், 20126 மாணவிகள் என 39740 பேர் தேர்வு எழுதிய நிலையில் 37360 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் ஒருபடி முன்னேறி 12 இடத்தை பிடித்துள்ளது. இதில் கோவை மாவட்டத்தில் செயல்படும் பள்ளிகளில் 190 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...