கோவை மேட்டுப்பாளையத்தில் சிக்னலில் தற்காலிக கூரை அமைப்பு - வாகன ஓட்டிகள் வரவேற்பு

கவுண்டம்பாளையம் கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.


கோவை: கோவையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் 10 நாட்களுக்கும் மேலாக சராசரியாக 103 டிகிரி என்ற அளவில் வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களும் இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.



இந்த நிலையில் மேட்டுப்பாளையம் கோவை நெடுஞ்சாலை கவுண்டம்பாளையம் கண்ணப்ப நகர் சந்திப்பு பகுதியில் கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் சார்பில் தற்காலிக கூரையானது அமைக்கப்பட்டுள்ளது.



பச்சை நிற துணியால் சுமார் 15 மீட்டர் நீளத்திற்கு சாலையின் ஒரு பகுதியில் இந்த கூரை அமைக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து சிக்னலில் நிற்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.



கடுமையான சுட்டெரிக்கும் வெயிலில் வாகனத்தை ஓட்டி வருபவர்கள் சிக்னலில் நிற்கும் பொழுது அதிக அளவிலான வெப்பத்தின் தாக்குதலுக்கு ஆளாகும் சூழலில் தற்போது மாநகராட்சி சார்பில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதல் நிழற்குடை இது என்னும் நிலையில் இதே போன்று அனைத்து சிக்னல்களிலும் அமைக்கும் பட்சத்தில் மிகவும் பயனுள்ளதாக அமையும் என வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...