கோவை மாவட்ட பாமக நிர்வாகிக்கு கொலை மிரட்டல் - MyV3 Ads சக்தி ஆனந்த் உட்பட 3 பேர் மீது வழக்கு

பாமக மாவட்டச் செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் மைவி3 உரிமையாளர்கள் சத்தியானந்த், விஜயராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஆகிய 3 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி சார்பில் பாமக-வினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அதில், கோவையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் மைவி3 நிறுவனம் விளம்பரங்களைப் பார்த்து மாதந்தோறும் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று ஆசை காட்டி வருகிறது.

அதை நம்பி உறுப்பினர்களாக சேர்ந்திருப்பவர்களிடம் இது வரை 2000 கோடி ரூபாயை சம்பந்தப்பட்ட நிறுவனம் வசூலித்திருக்கிறது. கடந்த ஆண்டு மை வி3 மோசடிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டது. பின் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.

இந்தநிலையில் கடந்த மாதம் 27ஆம் தேதி கோவை பாமக மாவட்ட செயலாளர் அசோக் ஸ்ரீநிதி தொலைபேசி எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் மை வி3 நிறுவனத்திற்கு எதிராக இனியும் செயல்பட்டால் உயிருடன் இருக்க முடியாது என்று கொலை மிரட்டல் விடுத்தார்.

அதற்கு பயன்படுத்தப்பட்ட செல்பேசி எண் மைவி3 நிறுவனத்திற்கு சொந்தமானது என்று உறுதி ஆகியுள்ளது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான சக்தி ஆனந்த் மற்றும் விஜயராகவன் அறிவுறுத்தலால் தான் இந்த கொலை மிரட்டல் அவருக்கு வந்துள்ளது.

எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பீளமேடு போலீசார் விசாரணை நடத்தினர்.

தொடர்ந்து மைவி3 உரிமையாளர்கள் சத்தியானந்த், விஜயராகவன் மற்றும் கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் ஆகிய 3 பேர் மீது போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து தற்போது (மே.2) விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“நிலத் தகராறு விவகாரத்தில் பொய் வழக்கு” - குடும்பத்துடன் கோவை எஸ்.பி அலுவலகம் முன்பு பெண் தர்ணா..!

கணியூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது நிலம் தொடர்பான தகராறில்  போலீசார் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு பொய் வழக்குகள் பதி...

பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் தீவிரம் – மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

பவானி தடுப்பணையில் கதவணை மற்றும் இயந்திரங்களின் வருடாந்திர பராமரிப்பு பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிராபகரன் நே...

TN Class 12 Results to Be Announced on May 8 at 9.30 AM

Tamil Nadu Class 12 public examination results will be announced on May 8 at 9.30 AM, the Directorate of Government Exam...

நாளை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு!

தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்...

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...