பில்லூர் அணையை தூர்வார திட்டம் - மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் விளக்கம்

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லூர் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லுார் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம் என்று மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.


கோவை: மழை இல்லாததால் நீர் மட்டம் வேகமாக சரிந்துவரும் நிலையில், பில்லூர் அணையை துார்வார நகராட்சி நிர்வாகத்திடம் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கோவை மக்களுக்கு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு உள்ளிட்டவை முக்கிய நீர் ஆதாரங்களாக திகழ்கின்றன. தற்போது, மழை இல்லாததால் அணைகளின் நீர் மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. சிறுவாணி அணையின் மொத்த நீர் தேக்க உயரம், 50 அடி. நேற்றைய நிலவரப்படி, 11.15 அடியாக நீர் மட்டம் இருந்தது.

இந்நிலையில், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நேற்று முன்தினம், சிறுவாணி அணைப்பகுதிக்கு சென்று, கோவைக்கு கேரளா தரப்பில் இருந்து முறையாக தண்ணீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார். இதுகுறித்து, கமிஷனர் சிவகுரு பிரபாகரன் கூறியதாவது, சிறுவாணியில் இருந்து தினமும், 3 கோடி லிட்டர் தண்ணீரை ஜூன் இரண்டாவது வாரம் வரை வழங்கும் வகையில் திட்டமிட்டு, கேரள அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்.

சிறுவாணி அணையை தூர்வாரும் அவசியம், தற்போதைக்கு இல்லை. பில்லுார் அணையை துார்வார திட்டமிட்டுள்ளோம். கடந்த வாரம்கூட, நகராட்சி நிர்வாக இயக்குனரக அதிகாரிகள் பில்லூர் அணையை தூர்வாருவது தொடர்பாக கேட்டுள்ளனர். இது தொடர்பாக திட்ட அறிக்கை அளித்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...