பொள்ளாச்சியில் வாக்கு இயந்திரத்தை பார்வையிட அனுமதி மறுப்பு - போலீசாருடன் திமுக வேட்பாளர் வாக்குவாதம்

வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர். இதனால் போலீசாருடன் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


கோவை: பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் பொள்ளாச்சி உடுமலை சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் மூன்று அடுக்கு பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி தேர்தலில் பதிவான வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட சென்ற திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி உள்ளிட்ட தலைமை முகவர் ஆகியோரை போலீசார் அனுமதிக்கவில்லை.



வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லாததால் உயர் அதிகாரிகள் அனுமதி பெற்றே பின்னரே உள்ளே செல்ல முடியும் என போலீசார் தெரிவித்தனர்.



இதனால் போலீசாருக்கும் திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி மற்றும் அவருடன் வந்தவர்கள் அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் அனுமதி வாங்கிய பின்னர் திமுக வேட்பாளர் ஈஸ்வர சுவாமி மற்றும் தலைமை முகவர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.



பின்னர் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி வாக்கு இந்திரங்கள் வைக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டதாகவும், தேர்தல் ஆணையம் நல்ல பாதுகாப்பு அளித்து இருப்பதாகவும் தெரிவித்த அவர், வாக்கு இயந்திரம் வைக்கபட்ட இடத்தில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் குறித்து எந்த புகாரும் வரவில்லை என்றும் ஈஸ்வரசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளியங்கிரி மலையில் பக்தர் திடீர் உயிரிழப்பு: வனத்துறை விசாரணை

கோவை வெள்ளியங்கிரி மலையில் தரிசனம் சென்ற மதுக்கரையைச் சேர்ந்த மயில்சாமி என்பவர் பூண்டி நான்காவது மலையில் உயிரிழந்து கிடந...

சத்தி சாலையில் அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதி விபத்து - இளைஞர் பலி

கோவை மாவட்டம் அன்னூர் சத்தி சாலையில் நேற்று மாலை அரசு பேருந்து மற்றும் கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரின் ஓட்டுநர...

கோவில்மேடு பாலகக் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்

கோவை கோவில்மேடு பகுதியில் பால் முகவர் டேவிட்டின் கடையில் அதிகாலையில் கணவன் மனைவி இருசக்கர வாகனத்தில் வந்து பால் பாக்கெட்...

கோவை மாவட்டத்தில் பத்ம விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் Pawan Kumar Giriyappanar, 2027ஆம் ஆண்டு பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்றுள்ளார். கலை, இலக்...

Zero G 2026 Fest: Park Group of Institutions Announces ‘Sakthi’ and ‘Nambikkai’ Scholarships

Dr. Anusha Ravi, Chief Executive Officer of the Park Group of Institutions, announced two new scholarship initiatives —...

பார்க் கல்விக் குழுமத்தின் “Zero G 2026” விழா: ‘சக்தி’ மற்றும் ‘நம்பிக்கை’ என புதிய கல்வி உதவித்தொகைகள் அறிவிப்பு.

பார்க் கல்விக் குழுமம் நடத்திய “Zero G 2026” கலாச்சார விழாவில், மாணவர்களுக்கான “நம்பிக்கை” மற்றும் “சக்தி” என்ற புதிய கல...