ஒரு குடம் குடிநீர் 12 ரூபாய், மாவட்ட நிர்வாகம் தங்களை புறக்கணிப்பதாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் மனு

கோவை, குனியமுத்தூர் பிளையார் புரம் பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்தனர். அதில் இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வருவதாக கூறியவர்கள் தாங்கள் வசித்து வரும் பகுதியில் உப்பு தண்ணீர் குழாய் மாநகராட்சி சார்பில் அமைக்கபட்டுள்ளதாகவும் இதில் தற்போது 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறைதான் தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக கூறினர். 



மேலும் தங்கள் பகுதியில் தெரு விளக்கு கம்பம் அமைக்கபட்டு பல வருடங்கள் ஆகியும் விளக்குகள் பொருத்தப்படாமலேயே உள்ளதால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக கூறியவர்கள் உப்பு தண்ணீர் முறையாக வழங்காத நிலையில் குடி நீருக்காக வாடகை வாகனம் அமர்த்தப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நீர் எடுத்து வந்து உபயோகிப்பதாகவும் இதற்காக ஒவ்வெரு முறையும் ரூபாய் 350லிருந்து ரூபாய் 500 வரை செலவாகுவதாகவும் தனியார் வாகனம் மூலம் ஒரு முறை அதிகபட்சமாக 30 குடங்களில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படுவதாக கூறிகின்றனர். 

மேலும், 1 குடம் குடிதண்ணீர் பெற ரூபாய் 12 செலவழிப்பதாக கூறினர். இது குறுத்து மாமன்ற உறுப்பினரிடம் கூறினால் ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் உங்களுக்கு எதுவும் செய்து தர முடியாது என கூறுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுக்காக தங்களை தேடி வருவதாக குற்றம் சாட்டினர். தங்கள் பிரச்சனை குறித்து பலமுறை மாவட்ட ஆட்சியர்களிடம் மனு அளிக்கபட்டும் எந்த ஒரு நடவடிக்கையும், மேற்கொள்ளவில்லை இதுவரை 3 ஆட்சியர்கள் மாறியுள்ளனர் ஆனால் தங்கள் பிரச்சனை இன்னும் தீரவில்லை என வேதனையுடன் தெரிவித்தனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...