குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படுவதால் கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவிந்த மக்கள்

கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் ஒரு முறை நீச்சல் போட 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாயும், பெரியவர்களுக்கு 50 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.


கோவை: கோவையில் குறைந்த கட்டணத்தில் நீச்சல் ஆர்வம் உள்ளவர்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றனர்.



கோவை காந்தி பார்க் பகுதியில் மாநகராட்சி நீச்சல் குளம் செயல்பட்டு வருகிறது. பராமரிப்பில் தனியார் நீச்சல் குளங்களை மிஞ்சும் அளவிற்கு தூய்மையாக உள்ள இந்த நீச்சல் குளத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீச்சல் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் இங்கு கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் தற்போது வந்த வண்ணம் உள்ளனர். 25 மீட்டர் நீலம் மற்றும் 13 மீட்டர் நீளம் கொண்ட இந்த நீச்சல் குளத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நாட்களில் நீர் மாற்றப்படுகிறது. அன்றைய தினம் நீச்சல் குளத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

நீச்சல் பயிற்சி வழங்குவதற்காக இங்கு மூன்று பயிற்சியாளர்கள் மற்றும் ஒரு லைஃப் கார்டு நியமிக்கப்பட்டுள்ளனர். இங்கு ஒரு முறை நீச்சல் போட 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 25 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பெரியவர்களுக்கு 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது தவிர மாதாந்திர பயிற்சிக்கு 1,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. இங்கு 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீச்சல் பயிற்சிக்கு வருகின்றனர்.

காலை 5.30 மணி முதல் 7.30 வரை அட்வான்ஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. பேசிக் பயிற்சி காலை 7.30 மணி முதல் 8.30 வரையும், பெண்களுக்கு என காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரையும், பொதுமக்களுக்கு காலை 9.30 மணி முதல் முதல் மாலை 4.30 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முறையாக நீச்சல் பயிற்சி பெற்றவர்களை தவிர மற்றவர்களுக்கு டைவ் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...