கடும் வெயிலால் கோவையில் இளநீர் விலை உயர்வு - ஒரு இளநீர் ரூ.45 விற்பனை

வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகின்றனர். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்று வியபாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: ஜில்லென்று காற்று வீசும் குளுகுளு கோவையில் கோடை காலம் தொடங்கியதில் இருந்து வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடும் வெயிலில் இருந்து பொதுமக்கள் தப்பித்துக்கொள்ள இளநீர், தர்பூசணி, எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, கரும்பு ஜூஸ், கூல், மோர் உள்ளிட்ட உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக்கூடிய பானங்களை பருகி வெப்பத்தை தனித்து வருகிறார்கள்.இந்த நிலையில், வெயிலுக்கு இளநீர் உகந்ததாக இருப்பதால் இளநீர் கடைகளில் விற்பனை சூடுபிடித்து உள்ளது.

இதன் காரணமாக கோவையில் இளநீர் விலை உயர்ந்து உள்ளது. அதன்படி கடந்த மாதம் ரூ.35 முதல் ரூ.40 வரை விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது (ஏப்ரல்.23) ரூ.45-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து இளநீர் வியாபாரிகள் கூறுகையில், கோவைக்கு பொதுவாக பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இளநீர் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிக அளவு இருப்பதால் வெப்பத்தில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் அதிக அளவு இளநீரை பருகி வருகிறார்கள். இதன் காரணமாக இளநீருக்கு கடும் கிராக்கி ஏற்பட்டு உள்ளது. இதனால் இளநீர் விலை உயர்ந்து இருக்கிறது. இந்த நிலை நீடித்தால் ஒரு இளநீரின் விலை ரூ.50-ஐ தொட்டு விடும் என்றனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...