கூடுதல் தண்ணீர் திறக்கக்கோரி பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட கால்வாய் மதகுகள் மீது ஏறி விவசாயிகள் போராட்டம்

கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் ஏறி நின்று விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பரம்பிகுளம் ஆழியார் பாசனத் திட்டத்தில் உள்ள திருமூர்த்தி அணையிலிருந்து முதலாம் மண்டல பாசனத்தில் இரண்டாவது சுற்று தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீர் மூலம் 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது தொண்டாமுத்தூர் கிளை கால்வாய்க்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே கூடுதலாக இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக் கூறி இன்று பொள்ளாச்சி அருகே குண்டலப்பட்டியில் உள்ள தொண்டாமுத்தூர் கிளை கால்வாய் மதகுகள் மேல் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏறி நின்று கூடுதல் நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் தண்ணீர் திறந்து விடக் கூறி கோஷங்களும் எழுப்பினர். தற்போது மழை இல்லாமல் வறட்சியாக இருப்பதால் தென்னை மரங்கள் காய்ந்து வருவதாகவும், தற்போது திறந்துவிடபட்ட தண்ணீர் மூலம் கடைமடை விவசாயிகள் வரை பயன் வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மேலும் இரண்டு நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அதிகாரிகள் இதுவரை வராததாது கவலை அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...