கோவையில் ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி: நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்பு


இன்று பெரும்பாலன் குழந்தைகளிடையே காணப்படும் ஆட்டிசம் என்ற குறைபாடு குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. 

குழந்தை சரியாக பேசாமல் இருந்தாலோ, சாப்பிடாமல் இருந்தாலோ அதை சாதாரணமாக எண்ணிவிடுகின்றனர் பெற்றோர்.

இந்த நிலையில், உலக ஆட்டிசம் தினமான நேற்று ஆட்டிசம் என்ற குறைபாடு குறித்து பெற்றோர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கோவை 'ப்ரூக் பீல்ட்ஸ்' வணிக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



'சரணாலயம்- தேர்ட் ஐ' என்ற ஆட்டிசம் பயிற்சிப்பள்ளி நடத்திய  இந்நிகழ்வில், ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகள் நடனமாடி அசத்தினர். மேலும், 'நாங்களும் உங்கள் போலத்தான், புறக்கணிக்க வேண்டாம்' என்ற வாசகங்களை தாங்கிய பதாகைகளை தாங்கியும் விளையாடி மகிழ்ந்தனர். 

நிகழச்சி குறித்து 'சரணாலயம்- தேர்ட் ஐ'-ன் தாளாளர் சரண்யா ரங்கராஜன் சிம்ப்ளிசிட்டிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- 



ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக எங்கள் பள்ளி தொடங்கப்பட்டது.

இந்தியாவில் 35 பள்ளிகளுக்கு மட்டுமே இந்த சான்றிதழ் உள்ளது. அதில் 'சரணாலயம்-தேர்ட் ஐ' ஒன்று என்பது பெருமையாக உள்ளது. கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள எங்கள் பள்ளியில் பல குழந்தைகளுக்கு பயிற்சி அழைக்கப்பட்டு வருகிறது.

ஆட்டிசம் என்ற குறைபாடை பெற்றோர்கள் பெரிய நோய் என்று கருதுகின்றனர். அதே நேரத்தில் இக்குறைபாடுள்ள குழந்தைகள் சமூகத்திற்குள் வரும்போது மற்றவர்கள் அவர்களை புறக்கணித்து, கேலி செய்கின்றனர். இது முற்றிலும் தவறு. 

முதலில் பெற்றோர்களும், சமுதாயமும் மாற வேண்டும். அமெரிக்காவில் 45க்கு 1 குழந்தைக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளதாக ஆய்வுகள் தெருவிக்கின்றது. ஆனால், இந்தியாவில் இது குறித்த எந்த ஆய்வும் எடுக்கப்படவில்லை. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் குறைந்தது 2% பேர் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது மரபு வழி குறைபாடல்ல. எந்த குழந்தைக்கும் ஏற்படலாம். கண்பார்த்து பேசாமலிருப்பது, சொன்னதை கேட்காமல் இருப்பது, சரியாக சாப்பிடத் தெரியாமல் இருப்பது போன்றவை ஆட்டிச குறைபாட்டின் அறிகுறிகள். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். மிக முக்கியமான ஒன்று, மருந்து மாத்திரைகளால் இந்த குறைபாட்டை சரி செய்ய முடியாது, முறையான பயிற்சியால் மட்டுமே இதை குணப்படுத்த முடியும். 

எங்கள் பயிற்சிப்பள்ளியில் 'அப்ளைடு பிஹேவியரல் அனாலிசிஸ்' என்ற முறை மூலம் ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.  வெளியூர்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் பலர் எங்கள் பயிற்சிப்பள்ளியில் பயின்று வருகின்றனர். கடந்த ஆண்டு 3 குழந்தைகளை குணப்படுத்தி சாதாரண பள்ளிக்கு அனுப்பியுள்ளோம். இந்த ஆண்டும் 3 குழந்தைகள் குணமாகிவிட்டனர்.  ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட ஒரு குழந்தை குணமாக குறைந்தது ஒரு வருட அவகாசம் வேண்டும். அதில் சிலர் 6 மாதங்களிலும் குணமாகலாம், சிலர் 3 வருடங்களிலும் குணமாகலாம்.



முதலில் ஆட்டிசம் என்ற வார்த்தையை மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். அதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியாக இன்றைய நிக்ழ்ச்சி நடைபெற்றது. விரைவில் கோவை முழுக்க இது குறித்த விழிப்புணர்வு நிக்ழச்சி ஏற்படுத்த உள்ளோம்.

ஆட்டிசம் குறைபாடுள்ள குழந்தை ஒன்றின் பெற்றோரின் மாத ரூ.10 ஆயிரத்திற்கு குறைவாக இருப்பின் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.250-ல் அக்குழந்தைக்கு பயிற்சியளிக்க உள்ளோம். வருகிற ஜூன் முதல் இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.  இவ்வாறு அவர் கூறினார். 



இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர்கள், பெறோர்கள், குழந்தைகள் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...