கோவையில் பாஜகவினர் ஓட்டுக்காக பணம் வழங்கும் முயற்சியில் பிடிபட்டனர்

கோவையில் பூலுவபட்டியில் நள்ளிரவில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது பறக்கும் படையினரால் ரூ. 81,000 பணம் மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore:

கோவை மாவட்டம் பூலுவபட்டியில் நள்ளிரவு, பாஜகவினர் பல்வேறு வார்டுகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்க முயற்சித்த போது, பறக்கும் படை அதிகாரிகளால் சோதனை மேற்கொள்ளப்பட்டு, ரூ. 81,000 மற்றும் பூத் ஸ்லீப்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த நபர்கள் வார்டு எண் 12, 13, 14, 15 பகுதிகளில் பணம் விநியோகிக்கப்படுவதாக திட்டமிட்டிருந்தனர். சென்றவர்களில் ஆலந்துறை பாஜகவின் மண்டல் தலைவர் ஜோதிமணி ஆகியோர் பெருமளவில் பணம் பதுக்கியிருந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

பாஜகவை சார்ந்த நபர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்டத் தேர்தல் கட்டுப்பாடு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொண்ட சோதனையில்பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்







கோவை மாவட்டம் பூலுவபட்டிமாரியப்பன் டீக்கடையில் வைத்து வார்டு வாரியாக வாக்காளர்களுக்கு பணம் வழங்க நோட்டில் பிரித்து எழுதிக் கொண்டிருந்த நபர்களை நள்ளிரவு பறக்கும் படையினர் பிடித்தனர்.







வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாகமாவட்ட தேர்தல்கட்டுப்பாட்டு அறையில் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் அங்கு சென்று பறக்கும் படையினர், ஆலந்துறை பாஜகவின்மண்டல் தலைவர் ஜோதிமணி என்பவர்வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூபாய் 81,000 பணத்தை பிடித்து, பேரூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

பிடிக்கும் பொழுது வாக்காளரின் பெயர், முகவரி அடங்கிய பூத் ஸ்லீப் கையில் இருந்ததையும் கைப்பற்றினர்.

பூலுவபட்டி பஞ்சாயத்தில் வார்டு எண் 12,13,14,15 ஆகிய பகுதிகளில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிக்கப்பட்டதாகவும், அடுத்த வார்டுகளுக்கு பணம் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...