திமுகவை தோற்கடித்தால் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 உரிமைத் தொகை கிடைக்கும் - வானதி சீனிவாசன் அறிக்கை

தமிழ்நாட்டு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் இன்று (ஏப்ரல்.17) வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும்.

கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டது.

இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இரண்டு கோடி பேருக்கும் உரிமை தொகை எப்போதுமே கிடைக்காது. மாறாக இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும்.

எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும்.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...