திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்

வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 3 ஆம் வார்டு பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.



அப்போது தப்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் மூன்று ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை குறைக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

3, ஆம் வார்டு கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தார். நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மூத்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...