திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு - வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசு கலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் புகார் தெரிவித்துள்ளார்.


கோவை: பப்ளிக் பாலிசி ரிசர்ச் சென்டர் எனும் மய்யம் தயாரித்த 'லட்சியங்களை கைவிட்ட திமுக' எனும் அறிக்கையை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோவை ராம் நகரில் உள்ள தனியார் விடுதியில்இன்று (ஏப்ரல்.16) வெளியிட்டார்.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு தேவைப்படுவதை மாநில அரசு புறக்கணித்து விட்டது. விவசாயிகளுக்கான நீர் ஆதாரம் குறைந்து உள்ளது. தமிழ்நாடு வளர்ந்து விட்டது என்று திமுக பொய் சொல்லி வருகின்றனர்.



ஆன்மீக சுற்றுலா பயணிகள் மூலம் தமிழ்நாட்டில் அதிக வருவாய் கிடைக்கிறது. ஆனால் திமுக அரசு கோவில்களை இடிப்பது, கடவுள்களை கொச்சை படுத்தி இழிவாக பேசி வருகின்றனர். திமுக ஆட்சியில் தொழில்கள் குறைந்து உள்ளது. இதனால் இளைஞர்களுக்கு தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது.



மத்திய அரசு மாநில அரசுக்கு பணம் கொடுக்கவில்லை என்று பொய் சொல்லி வருகிறார்கள். ஜி.எஸ்.டி கலந்தாய்வில் தமிழ அரசுகலந்து கொள்ளலாமல் புறக்கணித்து விட்டு தற்போது மத்திய அரசை குறை சொல்லி வருகிறது.கர்நாடகாவில் காங்கிரஸ் அமைந்த பிறகு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கிறார்கள். அது குறித்து அமைச்சர் துரைமுருகன் சட்ட பேரவையில் ஏதும் பேசாமல் அமைதி காத்து வருகிறார்.தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், முதியோர்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டது என்று கூறினார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...