எனக்கும் பொள்ளாச்சிக்கும் சுமார் 60 வருடங்கள் தொடர்பு உண்டு – பொள்ளாச்சியில் நடிகர் கமல்ஹாசன் பேச்சு

யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது. இலவச மின்சாரம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சியில் நடிகர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியாதவது, 60 வருடங்களாக பொள்ளாச்சிக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. பொள்ளாச்சியில் இரண்டு கோடி தென்னை மரங்கள் உள்ளன. தமிழகத்தில் மொத்தம் உள்ளதை நான்கு கோடி தென்னை மரங்கள். விவசாயிகளுக்கு நல வாரியம் அமைத்தது, உழவர் சந்தை அமைத்தது, விவசாயிகளுக்கு 7000 கோடி விவசாய கடன் தள்ளுபடி போன்றவற்றை செய்தவர் கலைஞர். இப்படி விவசாயிகளுக்காக செய்வதுதான் திராவிட மாடல்.



ஆகவே யாரும் திராவிட மாடலை கிண்டலாக பேசக்கூடாது. இலவச மின்சாரம், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், 2 லட்சம் மின் இணைப்பு போன்றவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பத்து ஆண்டில் மத்திய அரசு விவசாயத்திற்காக என்ன செய்தது? விவசாய பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு டெல்லிக்கு சென்ற விவசாயிகளை ஆணி படுக்கை கொண்டு வரவேற்பு அளித்தது தான் மத்திய அரசு. ஆகவே எந்த அரசு வேண்டும் என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். நல்லதை நினைத்து வாக்களியுங்கள் உதயசூரியனுக்கு. நாளை நமது ஆக வேண்டும் என்று நினைத்து வாக்களியுங்கள் என்றார்.

Newsletter

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...