ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் மூலம் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறுவார்கள் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

கோவை மாநகராட்சிக்குட்பட்ட பிசப் உபகாரம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் மூலம் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தலைமை வகித்தார். நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பயனாளிகளுக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டை வழங்கி பேசினார்.



அப்போது அவர் பேசுகையில், கோவை மாவட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்துவதற்காக, நிதிநிலை அறிக்கையில், 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை மிகவும் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 



தமிழகத்தில் சுமார் 1 கோடியே 89 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலமாக செயல்படும் 34,840 நியாய விலைக் கடைகள் மூலமாகவும், அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் 1250 நியாயவிலைக் கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் நடத்தும் 54 நியாயவிலைக் கடைகள், மகளிர் சுயஉதவிக்குழு நடத்தும் 108 நியாயவிலைக் கடைகள் மூலம் என மொத்தம் 1412 கடைகளில் 9,54,426 குடும்ப அட்டை தாரர்கள் பயன்பெறும் வகையில் மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி துவக்கப்பட்டு மே மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு, செல்போன் மூலம் குறுந்தகவல் அனுப்பப்படும். தகவல் பெறப்பட்ட பின்னர், ரேசன் கடைகளுக்கு நேரில் சென்று, மின்னணு குடும்ப அட்டைகளை அனைவரும் பெற்றுக் கொள்ளலாம் என எஸ்.பி.வேலுமணி பேசினார்.



இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் பிரபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மதுராந்தகி,  கோவை கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் கருப்பசாமி, அர்ச்சுன கூட்டுறவு சங்கத்தலைவர் டி.எ.பெருமாள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...