மீண்டும் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் - கோவையில் அண்ணாமலை மீது  பாய்ந்தது மூன்றாவது தேர்தல் விதிமீறல் வழக்கு...!

தேர்தல் நடத்தை விதியை மீறுவதாக கூறிய போலீசாரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக வேட்பாளர் அண்ணாமலை, திருச்சி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவர் மீது  ஐ.பி.சி 143, 341 பிரிவின் கீழ் சூலூர் மற்றும்  143, 341, 286, 290 பிரிவின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு.


கோவை: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை இரவு 10 மணிக்குள் வேட்பாளர்கள் முடித்துக்கொள்ள வேண்டும் என்ற விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில், தொடர்ந்து அந்த விதிமுறையை பாஜக வேட்பாளர் அண்ணாமலை மீறி வருவதாக எதிர்க்கட்சிகள்குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றன.

சமீபத்தில்,

ஆவாரம்பாளையம் பகுதியில் 10 மணிக்கு மேல் பிரச்சாரம் மேற்கொண்டதாக, தேர்தல் அதிகாரி அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல் நிலையத்தில் தேர்தல் விதிமீறல் வழக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலைமீது பதியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று பாஜக வேட்பாளர், அண்ணாமலை, நேற்று இரவு 10 மணியை கடந்து ஒண்டிப்புதூர், காமாட்சிபுரம் பகுதியில் பிரசாரத்தை முடித்து கொண்டு, திருச்சி சாலையில் வந்த போது அவரை பார்க்க நின்ற பாஜக தொண்டர்கள் கூடியிருந்தனர். அப்போது, அவர் ஒலிப்பெருக்கியில் பேசாமல், பிரச்சார வாகனத்தில் கையசைத்துவாறு அண்ணானலை பயணிக்க ஆரம்பித்தார். 

இரவு 10 மணிக்கு மேல் இவ்வித பிரச்சாரத்திலும் வேட்பாளர்கள் ஈடுபடக்கூடாது என்ற விதியை மீறி, நூதன முறையில் மைக்கில் பேசாமல், கையசைத்தபடிபிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலையின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். 



நான் தான் மைக்கில் பேசவில்லையே, பிரச்சாரத்துக்கு வந்து காத்து கிடக்கும் தொண்டர்களை நான் பார்க்காமல் செல்ல முடியாது. எனவே, பிரச்சார வாகனத்தில் அமர்ந்தபடியே வணக்கம் சொல்கிறேன் என காவல் துறையினரிடம் பதிலளித்து வாகனத்திலிருந்து இறங்க மறுத்துள்ளார். இதைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள், பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட்டனர்.

அவரது வாதத்திற்கு பதில் அளித்த போலீசார், பிரச்சார வாகனத்தில் மைக்கை பயன்படுத்தி பேசாமல் இரவு 10 மணிக்கு மேல் கை சேர்த்தவாறு சாலையில் சென்றாலும், அதுவும் பிரச்சாரமாகவே கருதப்படும் என்று போலீசார் எடுத்து கூறியுள்ளனர். 



பின்னர், பிரச்சார வாகனத்தில் இருந்து இறங்கி சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. திருச்சி நெடுஞ்சாலையில், திடீரென சாலையை மரித்து அண்ணாமலை மற்றும் பாஜகவினர் தர்ணாவில் ஈடுபட்டதால், அப்பகுதியில் இருந்த வாகனங்கள் செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டன.

பின்னர், தர்ணாவை கைவிட்டு அங்கிருந்து அண்ணாமலை மற்றும் பாஜக தொண்டர்கள் நடைபயணம் மேற்கொண்டார். அப்போதும், பாஜகவினர் பாரத் மாதா கீ ஜெய் என்று முழக்கமிட்டபடி நடந்தனர். இந்த சலசலப்பால், சாலையில் 3 கிலோ மீட்டருக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 



ஒரு கட்டத்தில், போலீசாரின் பேச்சுவார்த்தைக்கு பின்னர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

நேற்று நடந்த தேர்தல் வீதி மீறலுக்கு, அண்ணாமலை மீது தரப்பட்ட புகாரின் அடிப்படையில் ஐ.பி.சி 143, 341 பிரிவின் கீழ் சூலூர் காவல் நிலையத்திலும், 143, 341, 286, 290 பிரிவின் கீழ் சிங்காநல்லூர் காவல் நிலையத்திலும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 

தேர்தல் விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை பாமரர்கள் கூட அறிந்திருக்கும் நிலையில், முன்னாள் காவல் அதிகாரியான அண்ணாமலை, ஏன் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபடுகிறார் என்று சமூக வலைதளங்களில்மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Newsletter

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...

கோவையில் இரவு பெய்த கனமழை; மழைநீர் தேங்கி பொதுமக்கள் அவதி

வானிலை ஆய்வு மையம் எச்சரித்தபடி கோவையில் நேற்று மாலை கனமழை பெய்தது. உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க் உள்ளிட்ட பகுதி...

வெள்ளியங்கிரியில் யானை துரத்தியதில் இருசக்கர வாகன ஓட்டுநர் படுகாயம்

வெள்ளியங்கிரி அடிவாரத்தில் முள்ளங்காடு செக் போஸ்ட் அருகே இன்று அதிகாலை யானை துரத்தியதில் டீ வியாபாரி ஆறுச்சாமி இருசக்கர...