10 ஆம் தேதி பிரதமர் வருகையையொட்டி ட்ரோன்கள் பறக்க தடை - காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அறிவிப்பு.

வருகிற 9, 10 தேதிகளில், மேட்டுப்பாளையம், தென் திருப்பதி நால்ரோடு, சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு மற்றும் பிரதமர் வரவிருக்கும் வழித்தடத்தில், எவ்வித டிரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை : இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழ்நாடு வரவுள்ள பிரதமர் மோடி, வரும் 10 ஆம் தேதி மேட்டுப்பாளையத்தில் பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதையடுத்து, கோவை, நீலகிரி பாராளுமன்ற தொகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. 

இது குறித்து, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் இன்று (ஏப்ரல்.8) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பிரதமர் மோடி, வருகின்ற 10. 04. 2024 தேதி புதன்கிழமையன்று கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், காரமடை காவல் நிலைய பகுதியில் உள்ள தென் திருப்பதி நால் ரோடு சந்திப்பில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வருகை தர உள்ளார்.

பிரதமரின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு பொது கூட்டம் நடைபெறும் இடத்தில் இருந்து 5 கி. மீ. சுற்றளவிற்கு பிரிவு 24 (ii) of Drones Rules 2021- ன் படி 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு தற்காலிக சிவப்பு மண்டலமாக அறிவித்து கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

அதில், பொது கூட்டம் நடக்கும் இடமான கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் உட்கோட்டம், தென் திருப்பதி நால்ரோடு அதனை சுற்றி 5 கி. மீ. தொலைவிற்கு (வான் வழியாக) மற்றும் அவர்கள் வரவிருக்கும் வழித்தடத்தில், வருகிற 09. 04. 2024 மற்றும் 10. 04. 2024 ஆகிய இரு தினங்களுக்கு எவ்வித டிரோன்கள் (Drones) மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (Unmanned Aircraft System Flights) பறக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...