தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினரை மிரட்டியது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் ஆதாரங்களுடன் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார்

எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும் பாஜக வேட்பாளர் முருகானந்தம் புகார் தெரிவித்தார்.


திருப்பூர்: திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம் போட்டியிடுகிறார். கடந்த ஒரு வார காலமாக திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் தீவிர பரப்பரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் அந்தியூர் அருகே தேர்தல் பரப்பரையில் ஈடுபட்டபோது தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் மற்றும் வேட்பாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் வேட்பாளர் ஏ.பி. முருகானந்தம் மீது குன்னத்தூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



பணியில் இருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தும் கூட தன்னிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்து கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, தனது நேரத்தை திட்டமிட்டு முடக்குவதற்காக இச்சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகம் எழுவதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜுவை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து சம்பவம் நடந்தபோது எடுத்த வீடியோ காட்சிகளுடன் புகார் மனுவை அளித்துள்ளார்.



தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த ஒரு ஆவணங்களும் இல்லாமல் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் என்ற பெயரில் சோதனை மேற்கொண்டு வருவதாகவும், அவ்வழியே வருபவர்களிடம் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாகவும், இது குறித்தெல்லாம் கேட்டதற்காக தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், வழக்கு பதிவு செய்வதற்கான எந்த ஒரு முகாந்திரமும் இல்லை எனவும், அதற்கான ஆதாரங்களுடன் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிறிஸ்துராஜூவிடம் விளக்கமாக எடுக்கக் கூறி புகார் மனு அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...