டீசல், பெட்ரோல் மீதான வாட்வரி குறைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் லாரி உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்


காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் லாரி உரிமையாளர்கள் டீசல், பெட்ரோல் மீதான வாட் வரியினை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



டீசல், பெட்ரோல் மீதான வாட் வரி அதிகரிப்பு, வாகன இன்சூரன்ஸ் கட்டண உயர்வு, 15 வருட பழைய வாகன இயக்கத்தடை, காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே தமிழக போக்குவரத்து துறை அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து, லாரி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாக இன்று வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் சுமார் 4 ஆயிரத்து 500 லாரிகள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

இப்போராட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாரி உரிமையாளர்கள் முன்வைத்துள்ள 6 கோரிக்கைகளில் 2 கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசு முன்வந்திருந்தாலும், தமிழக அரசு லாரி உரிமையாளர்களின் பிரச்சனைகளை அலட்சியப்படுத்துவதாக குற்றம்சாட்டிய லாரி உரிமையாளர்கள், கோரிக்கைகள் நிறைவேற்றும் வரை வேலை நிறுத்தம் தொடருமென தெரிவித்தனர்.

இந்த வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்டவை தேக்கமடைந்து இருப்பதாகவும், கோவை மாவட்டத்தில் லாரிகள் வேலை நிறுத்தப்போராட்டம் காரணமாக நாள் ஒன்றுக்கு 100 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...