திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பொள்ளாச்சியில் வாக்குசேகரிப்பு

சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது என்று காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை விமர்சனம் செய்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஈஸ்வரசாமியை ஆதரித்து பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பரப்புரையில் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டு பேசினார்.



அப்போது இந்த நாட்டில் படித்த இளைஞர்களுக்கு வேலை வழங்குவதாக கூறிவிட்டு மத்திய அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்கவில்லை. ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு மோடி ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டிய செல்வப் பெருந்தகை, பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, இந்தியாவில் ஜனநாயக ஆட்சியா? நடக்கிறது. சாதாரண மனிதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தகவல் கேட்டால் மாதக்கணக்கில் தகவல் கிடைப்பதில்லை. ஆனால் அண்ணாமலை கடிதம் எழுதினால் இந்த நாட்டுடைய ரகசியத்தை ஒரு வாரத்திற்குள் தருகிறார்கள். இங்கு சர்வாதிகார ஆட்சியா நடக்கிறது, இந்த நாட்டில் மோடிக்கு ஒரு சட்டம், அண்ணாமலைக்கு ஒரு சட்டம், 140 கோடி மக்களுக்கு ஒரு சட்டமா? என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கச்சத்தீவை புதிதாக பேசுகிறீர்கள். இந்திரா காந்தி இந்த நாட்டு மக்களின் நன்மைக்காக ஒவ்வொரு அடியும் எடுத்து வைத்து தன் உயிரை தியாகம் செய்தவர். அவரைப் பேசுவதற்கு மோடிக்கும் எந்த தலைவருக்கும் அருகதை இல்லை என தெரிவித்தார்.

Newsletter

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...