சமூக வலைத்தளங்களில் பயணியர் குறை தீர்ப்பில் தெற்கு ரயில்வேயில் சேலம் கோட்டம் முதலிடம்.

முன்பு எப்போதுமிராத அளவுக்கு இந்திய ரயில்வேயில் பயணியர் மற்றும் ரயில் உபயோகிப்போரின் குறைகள் தீர்ப்பதில் அதிக கவனம் தற்போது செலுத்தப்பட்டு வருகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் சுரேஷ்பிரபு திறனாய்வுக்கூட்டங்களில் இதன் முக்கியத்துவத்தை அதிகமாக வலியுறுத்தி வருகின்றனர்.

அத்தகு கூட்டங்களில் சமூக வலைத்தளங்கள் உட்பட்ட அனைத்து குறைதெரிவிப்பு முனையங்களிலும் தெரிவிக்கப்படும் குறைகளும், அவைகள் தீர்க்கப்பட எடுத்துக் கொள்ளப்படும் கால அவகாசங்களும் சீராய்வு செய்யப்படுகின்றன. 

இந்திய ரயில்வே இவ்வாறு பெறப்பட்ட 90 சதவீத குறைகளை இது வரை தீர்த்து வந்துள்ளது. 

சமீபத்தில், ரயில்வே வாரியம் தெற்கு ரயில்வேக்கு இது குறித்த ஓர் ஆய்வறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், பேஸ்புக், டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பெறப்பட்ட புகார்களுக்கு பதிலளிப்பிதில் தெற்கு ரயில்வேயின் சேலம் கோட்டம் மிக விரைந்து செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சேலம் கோட்டம் சமூக வலைத்தளங்கள் மூலமாக பெறப்படும் புகார்களுக்கு தெற்கு ரயில்வேயின் மற்ற கோட்டங்களை விட விரைவாக, (திருச்சி கோட்டம்-454 நிமிடங்கள், பாலக்காடு கோட்டம்-402 நிமிடங்கள், சென்னைக் கோட்டம்-151 நிமிடங்கள், திருவனந்தபுரம் கோட்டம்-82 நிமிடங்கள்)   அதாவது 12 நிமிடங்களில் பதிலளித்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் ஹரிசங்கர் வர்மா, இவ்வாறு திறமையாக செயல்பட்டு பயணிகள் குறைதீர்க்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துவரும் சேலம் கோட்ட முதுநிலை வணிகவியல் மேலாளர் விஜுவின் தலைமையிலான வணிகவியல் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...